கொழும்பிலும் கையடக்க தொலைபேசி திருத்தும் பாடநெறி வெற்றிகரமாக நிறைவு.!
எமது Nation Plus2 Consultancy (Pvt) Ltd நிறுவனத்தின் வழிகாட்டலினூடாக International Tech Academy (ITA) இனால் கையடக்க தொலைபேசி திருத்தும் பாடநெறியின் வெற்றிகரமான 37ஆவது பிரிவு கடந்த 25.08.2022 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 28.08.2022 திங்கட்கிழமை வரை கொழும்பு வெள்ளவத்தையில் அமைத்துள்ள எமது காரியாலயத்தில் நடைபெற்றது.
இத்துறையில் திறமையான வளவாளர்களூடாக குறித்த மாணவர்களுக்கு ஒரு சுய தொழிலை ஆரம்பிக்கக்கூடிய வகையில் கையடக்க தொலைபேசி திருத்தும் சகல பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
அந்த வகையில் எமது Nation Plus2 Consultancy (Pvt) Ltd நிறுவனத்தின் வழிகாட்டலினூடாக ITA இன் 37 ஆவது கையடக்க தொலைபேசி திருத்தும் பாடநெறியை 05 மாணவர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்து பெறுமதியான சான்றிதழையும் பெற்றுக்கொண்டனர்.




